இப்பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதர தகுதிகள் மற்றும் விவரங்கள் தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.

Continues below advertisement

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) மின் விநியோகப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், 8,000 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதன்படி, 2027-ஆம் ஆண்டில் 5,000 பணியிடங்களும், 2028-ஆம் ஆண்டில் 3,000 பணியிடங்களும் என மொத்தம் 8,000 பணியிடங்கள் இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. முறையே, இதற்கான கூடுதல் செலவினமாக 2027-ஆம் ஆண்டில் ரூ.213.28 கோடியும், 2028-ஆம் ஆண்டில் ரூ.127.97 கோடியும் ஏற்படும். இப்பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இதர தகுதிகள் மற்றும் விவரங்கள் தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.

மின்சாரத் துறையின் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகம் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளிலும் அனைத்துப் பணிகளையும் திறம்படச் செயல்படுத்தவும், பணிகளை முறையாகக் கண்காணிக்கவும், அவசர காலங்களில் ஏற்படும் மின்தடைகளை விரைந்து சரிசெய்து மின்சார விநியோகத்தை மீண்டும் சீரமைக்கவும் போதிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இருப்பது மிகவும் அவசியமாகும்.

பணியிடங்களுக்கான விண்ணப்பத் தேதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு நடைமுறை மற்றும் இதர விவரங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.