தெற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, திருவனந்ததபுரம், சேலம் உள்ளிட்ட  ரயில்வே கோட்டங்களில் உள்ள அலுவலகங்களில்  Scouts & Guides இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.


கல்வித் தகுதி



  • இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

  • டெக்னிக்கல் பிரிவு வேலைக்கு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • லெவல் -1 பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தெரிவு செய்யும் முறை 


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


ஊதிய விவரம்




எழுத்துத் தேர்வு விவரம்





ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20,2024


வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://iroams.com/rrc_sr_scout/pdfs/400_477831.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


2250 பணியிடங்கள்; ரயில்வே துறையில் வேலை 


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


Sub-Inspectors (Exe.) - 250


Constables (Exe.) - 2000


இரயில்வே பாதுகாப்பு படை ( Railway Protection Force (RPF)) ,இரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ( Railway Protection Special Force (RPSF)) இரண்டு பிரிவுகளில் தகுதியானவர்கள் 


மொத்த பணியிடங்கள் - 2,250


கல்வித் தகுதி:



  • உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

  • கான்ஸ்டபிள் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • பள்ளியில் 10+12 -வது என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 

  • அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு காலிப் பணியிடங்களில் 10 சதவீதமும், பெண்களுக்கு 15 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு 



  • சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸியூடிவ்) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

  • கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தெரிவு செய்யும் முறை


இதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கம்யூட்டர் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கம்யூட்டர் தகுதித் தேர்வு பாடத்திட்டம்





உடற்தகுதித் தேர்வு பாடத்திட்டம்




PET தேர்வு பாடத்திட்டம்


 




விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த முழு விவரங்களை https://indianrailways.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot ) 


மொத்த பணியிடங்கள் - 5696


கல்வி மற்றும் பிற தகுதிகள் 


இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபிட்டர், எலக்ட்ரீசியன், ஹீட் இஞ்சின், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்ப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், Ex-Servicemen,பெண்கள், Transgender ஆகியோர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும்.


தெரிவு செய்யப்படும் முறை 


ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 19.02.2024