சுகாதாரத் துறையில் 299 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்ப, எம்ஆர்பி அழைப்பு விடுத்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB), மாநில மருத்துவ சேவையின் கீழ் காலியாக உள்ள சிறப்புத் தகுதியுடன் கூடிய உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon - General with Speciality) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்

இதில் மொத்தம் 299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. துறை வாரியான இடங்கள் பின்வருமாறு:

Continues below advertisement

  • மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் (Obstetrics & Gynaecology): 182
  • தடயவியல் மருத்துவம் (Forensic Medicine): 50
  • கதிரியக்கவியல் (Radiology): 37
  • இதய அறுவை சிகிச்சை (Cardiothoracic Surgery): 20
  • முதியோர் மருத்துவம் (Geriatrics): 10

ஊதியம்

தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு ஊதிய மேட்ரிக்ஸ் நிலை-22 (Pay Matrix Level-22) அடிப்படையில், மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி (SC), எஸ்சிஏ (SCA), எஸ்டி (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (DAP) ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 18, 2025 அன்று தொடங்கிய நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் கடைசி நாள் ஜனவரி 7, 2026 ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பிற நிபந்தனைகள் குறித்த முழு விவரங்களை இணையதளத்தில் உள்ள விரிவான அறிவிக்கையில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். கடைசி நேரத்தில் ஏற்படும் இணையதள நெரிசலைத் தவிர்க்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மெயில் முகவரி: mrbrgw2025@onlineregistrationform.org

தொழில்நுட்ப சந்தேகங்கள்: 022 42706513

தகுதி தொடர்பான கேள்விகளுக்கு: 044 24355757

கூடுதல் தகவல்களுக்கு: