போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


MTC, SETC, TNSTC என அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


மாநகர் போக்குவரத்து கழகத்தில் 364, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. விழுப்புரத்தில் 322, கும்பகோணத்தில் 756, கோயம்புத்தூரில் 384, மதுரையில் 322, திருநெல்வேலியில் 362 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நாளை முதல் அதாவது மார்ச் 21ஆம் தேதி முதல் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


2025ஆம் ஆண்டுப்படி 25 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.


உயரம் 170 செ.மீட்டரும், குறைந்தபட்ச எடை 50 கிலோ இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.