திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் மதிப்பூதிய நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 


மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியீடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:


சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் (28.12.2020)-ன்படி, தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு இல்லங்களில் (வால்டாக்ஸ், தர்மபுரி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், தூத்துக்குடி, தென்காசி தவிர்த்து) தங்கி பயிலும் குழந்தைகளுக்கு ஆற்றுநர்கள் மூலம் ஆற்றுபடுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்


அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 (ஒருவர் பெண் பணியாளர்) மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.


TVK Manadu: தவெக முதல் மாநாடு... போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதிலை தயார் செய்த தலைவர் விஜய்?


கல்வி தகுதி 


இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம்பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் 15 நாட்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


தேர்வு செய்யப்படும் முறைகள் 


தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக் குழு மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்கப்படும்.


விவரங்களுக்கு 


மேலும் விவரம் வேண்டுவோர் சம்மந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திருவண்ணாமலை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட குழந்தைகள் பாது விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


காப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை - Pin: 606 601, தொலைபேசி எண்: 04175 - 223030 என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.