திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியான உள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
திட்ட மேலாளர்
தரவு உதவியாளர்
கல்வித் தகுதி
BAMS / BUMS/ BHMS/ BSMS/ BNYS உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தரவு உதவியாளர் பணிக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். பி.டெக்., ஐ.டி., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.டி. ஐடி உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
திட்ட மேலாளர் - ரூ.30,000
தரவு உதவியாளர் - ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு தேவயான ஆவணங்களுடன் கல்வித் தகுதி சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றுடன் சுயவிவர குறிப்புடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இது முற்றிலும் தற்காலிக பணி மட்டுமே. பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
கெளர செயலாலர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை
விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.10.2023
******
கோயம்புத்தூரில் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (Sardar Vallabhbhai Patel International School of Textiles & Management) ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி கல்லூரியில் நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஓராண்டு கால ஒப்பந்த பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
அலுவலக உதவியாளர்
ஜூனியர் அசிஸ்டண்ட் லெவல்-2
ஜூனியர் அசிஸ்டண்ட் அக்கவுண்ட்ஸ்
கண்காணிப்பாளர் - சிவில்
கண்காளிப்பாளர் - எலக்ட்ரிக்கல்
பன்முக உதவியாளார்
கல்வித் தகுதி:
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஷார்ஹேண்ட் 100/ நிமிடத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். டைப் ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- இந்தி தெரிந்தவராக இருந்தால் சிறப்பு.
- ஜூனியர் அசிஸ்டெண்ட் லெவல் -2 பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நல்ல மொழியாளுமை கொண்டவராக இருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- இந்தி, Tally தெரிந்திருந்திருப்பது கூடுதல் சிறப்பு.
- ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Tally தெரிந்திருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இந்தி பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- கண்காணிப்பாளர் பணிக்கு சிவில், எலக்டிரிக்கல் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
- இந்தப் பணியிடங்களுக்கு அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றியவர்களாக இருந்தால் நல்லது.
ஊதிய விவரம்
- அலுவலக உதவியாளர் - ரூ.33,740
- ஜூனியர் அசிஸ்டண்ட் லெவல்-2 -ரூ.25,820
- ஜூனியர் அசிஸ்டண்ட் அக்கவுண்ட்ஸ் -ரூ. 23,322
- கண்காணிப்பாளர் - சிவில்-ரூ.23,322
- கண்காளிப்பாளர் - எலக்ட்ரிக்கல் - ரூ.23,322
- பன்முக உதவியாளர் - ரூ.17,830
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Director,
Sardar Vallabhbhai Patel International
School of Textiles & Management,
1483, Avinashi Road, Peelamedu,
Coimbatore – 641 004. Tamilnadu.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 23.09.2023
நேர்காணல் நடைபெறும் நாள் - 25.09.2023
நேர்காணல் நடைபெறும் முகவரி:
Conference Hall,
1st floor Administrative Block,
SVPISTM,
Coimbatore – 641 004
நேர்காணலுக்கு என்ன கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தகவல்களை- https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/33RECRUITMENT%20NOTIFICATION%20-%202.pdf - என்ற இணைப்பை பயன்படுத்தி காணலாம்.