திருவண்ணாமலையில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.


பணி விவரம்


நிதி உதவியாளர் (Account Assistant)


பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)


Sector Health Nurse/Urban Health Manager


கல்வித் தகுதி:


நிதி உதவியாளர் பணிக்கு B.Com பட்டப்படிப்புடன்  Tally நன்கு தெரிந்திருக்க வேண்டும்.


பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor of Physiotherapy (BPT) சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.எஸ்.சி. நர்ஸிங் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், Community Health,  Paediatrics,  Obstetrics & Gynacology ஆகியவைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


இந்த பணிக்கு B.Sc. Nursing தேர்ச்சி உடன் பொது சுகாதார துறையில் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிவ விவரம்:


 கணக்கு உதவியாளர் - மாதச் சம்பளமாக ரூ.16,000  வழங்கப்படும்.


பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist)- மாதச் சம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும். 


 நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர் -மாதச் சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும்.


நிபந்தனைகள்:


இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.


 எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-


கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,


மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),


துணை சுகாதார பணிகள் அலுவலகம்,


பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,


திருவண்ணாமலை.


 


குறிப்பு:


மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.12.2022


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 05.12.2022


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2022/11/2022111838.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


திருவண்ணாமலை மாவட்டத்தின் சுகாதார துறையின் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/  என்ற இணையதளத்தை பிந்தொடரலாம்.




மேலும் வாசிக்க..


JEE Main 2023 Date: ஜேஇஇ மெயின் 2023 தேர்வுகள் எப்போது? - என்டிஏ சார்பில் வெளியான தகவல்!