திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (pmmsy - 2023-24 கீழ்) கீழ்கண்ட திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


புதிய மீன்வளர்ப்பு குளங்கள்


புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட 1.0 ஹெக்டருக்கு ஆகும் செலவின தொகை ரூ 7 இலட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 2 இலட்சத்தி 80 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 4 இலட்சத்து 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்


நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு 1.0 ஹெக்டருக்கு ஆகும் செலவின தொகை ரூ.4 இலட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீவதம் மானியம் ரூ 1 இலட்சத்து 60 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 2 இலட்சத்து 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்



சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும். செலவின தொகை ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 3 இலட்சம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 4 இலட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


வீட்டின் பின்புறம் ஃகொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு


வீட்டின் பின்புறம் ஃகொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும். செலவின தொகை ரூ 3 இலட்சம் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 1இலட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ1 இலட்சத்து 80 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு


நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும். செலவின தொகை ரூ 8 இலட்சம் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 3 இலட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 4 இலட்சத்து 80 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


நவீன மீன் அங்காடி (முஐழுளுமு)


நவீன மீன் அங்காடி (முஐழுளுமு) திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும். செலவின தொகை ரூ10 இலட்சத்தில்
பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 4 இலட்சம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 6 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.


குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம்


குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் அலகு ஒன்றிற்கு ஆகும். செலவின தொகை ரூ 20இலட்சம் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 8 இலட்சம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 12 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.



குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம்


குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் அலகு. ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ75 ஆயிரம்பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 29 ஆயிரத்து 319 பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம் ரூ 44 ஆயிரத்து 319 மானியமாக மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பங்கள் மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வேலூர் அலுவலகத்தை (எண். 16 5வது மேற்கு குறுக்கு தெரு காந்திநகர் காட்பாடி வேலூர்- 632006 (அலுவலக தொலைபேசி எண் 0416-2240329 அலைபேசி எண்: 7845947040 மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  தெரிவித்துள்ளார்.