திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
- துணை நூலகர்
- துணை பதிவாளர்
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- ஜூனியர் உதவியாளர்
- ஜூனியர் இந்தி உதவியாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர்
- உடற்பயிற்சியாளர்
கல்வித் தகுதி:
- துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
- குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in
பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023
***
கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் Centre for University and Industry Collaboration (CUIC) இணைந்து Tata Electronics Private Limited-ல் இளங்கலை Manufacturing Science துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிவிவரம்
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
கல்வித் தகுதி:
தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் NET /SLET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு bucuic2020@buc.edu.in- என்ற இ-மெயில் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும். அதோடு, நேர்காணல் நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
BU-CUIC Hall
Bharathiar University,
Coimbatore 641046
தொடர்புக்கு- +91-95971 74445
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.09.2023
நேர்காணல் நடைபேறும் தேதி - 19.09.2023
கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.