தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள உள்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
பணி விவரம்:
- நாதஸ்வரம்
- தவில்
- தாளம்
- சுருதி
- உதவி அர்ச்சகர்
- இலை விபூதிபோத்தி
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- நாதஸ்வரம் - ரூ.19,500-62,000
- தவில் - ரூ.18,500-58,600
- தாளம் -ரூ.18,500-58,600
- சுருதி -ரூ.18,500-58,600
- உதவி அர்ச்சகர் -ரூ.15,900-50,400
- இலை விபூதிபோத்தி - ரூ.15,900-50,400
இதர நிபந்தனைகள்:
இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,
திருச்செந்தூர் - 628215,
தூத்துக்குடி மாவட்டம்.
தொலைப்பேசி எண் : 04639-242221.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 27.01.2023 மாலை 05.45 மணி வரை
இது குறித்த முழு விவரத்திற்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.phpஎன்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க.