தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி: தவில், தாளம், சுருதி, அர்ச்சகர் உதவியாளர், நாதஸ்வரம்

கல்வித்தகுதி:

1.தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்;

2.மத நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் இசைப் பள்ளியில், தொடர்புடைய துறையில் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 18 வயது முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்தல் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: நேரடியாக அல்லது அஞ்சள் வழியாக

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-27 , 2023

நிபந்தனை:

  • இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் தகுதியற்றவர்கள்
  • ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
  • விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் கிடையாது

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர்,

தூத்துக்குடி,

தொலைபேசி: 04639 - 242221

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதலில்  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
  • பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும். Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271].,Senthilambathy, Thirucheeralaivai,Senthilandavar, Kadarkarai aandi (tn.gov.in)

Also Read: NLC Apprentice 2023 : பிரபல நிறுவனத்தில் அப்ரண்டிஷிப் வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இங்கே!..

Also Read: TNPSC : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?...