தூத்துக்குடி: வேலை தேடும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கு எப்போது நடைப்பெறவுள்ளது?
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை(21.11.25) காலை 9 மணி முதல் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.
100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு
தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் இதில் பங்கேற்க உள்ளன. பல துறைகளில் பணியாளர்களுக்கு தேவை உள்ளதால் இந்த முகாம், வேலை தேடும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8-ம் வகுப்பு முதல் முதுநிலை வரை அனைவருக்கும் வாய்ப்பு
8-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை — பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ போன்ற துறைகளில் தகுதி பெற்ற அனைவரும் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.
ஆன்லைன் பதிவு அவசியம்
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையத்தளத்தில் Candidate Login மூலம் பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள்: Employer Login மூலம் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனல் மற்றும் மின்னஞ்சல்: deo.tut.jobfair@gmail.com மூலம் தெரிந்துக்கொள்ளலாம்
கலந்துகொள்ளும் வேலைநாடுநர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை ரத்து செய்யப்படாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க நினைவாக நடத்தப்படும் இந்த மாபெரும் முகாம், ஆயிரக்கணக்கானோர் பயனடையும் நிகழ்வாக இருக்கும்.