திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் (TNHSRP) திட்டத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 




பணி விவரம்


தர மேலாளர் (Quality Manager)


கல்வித் தகுதி:


Hospital Administration / Health Management / Master of Public Health (Regular) ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.60,000 வழங்கப்படும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.12.2023


BHEL Recruitment 2023


திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.. மொத்தம் 680 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளன.


பணி விவரங்கள்:


Graduate Apprentice,Technician Apprentice ,Trade Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.


Graduate Apprentice - 179


Technician Apprentice- 398


Trade Apprentice -103


மொத்த பணியிடம் - 680


ஊதிய விவரம்:


Graduate Apprentice - ரூ.9,000/-


Technician Apprentice- ரூ.8,000/-


Trade Apprentice -ரூ.7,700 - ரூ.8,050/-




தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  10+2 என்ற முறையில் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். 


70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்,.


வயது வரம்பு:


27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.12.2023


அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://www.apprenticeshipindia.gov.in/



எப்படி விண்ணப்பிப்பது?


 விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.apprenticeshipindia.gov.in/ கிளிக் செய்யவும், 


 ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.


அடுத்து“BHEL Apprentice Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.


உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.


அறிவிப்பின் முழு விவரத்திற்கான லிங்க் - https://trichy.bhel.com/tms/app_pro/Graduate_App.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


*


செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரம்


சமூகப் பணியாளர்


கல்வி மற்றும் பிற தகுதிகள் 


இதற்கு விண்ணப்பிக்க சோஷியாலஜி, சோஷியல் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
 
பணி தொடர்பான அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


மாத ஊதியம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.18,538 வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி சான்றிதழ் நகல்களுடன் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/11/2023111754.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,


எண்.ஏ.80, 10-வது குறுக்குத் தெரு


அண்ணாநகர்,


செங்கல்பட்டு - 603 001


தொடர்புக்கு - 044- 35006105


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.11.2023