பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு துறைகளில்  696 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மே 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தான் பேங்க் ஆஃப் இந்தியா. அனைத்து மாநிலம் முழுவதும் பல்வேறு கிளைகளின் கீழ் செயல்பட்டுவரும் இவ்வங்கியில் தற்போது 696 பணியிடங்கள்  காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 594 பணியிடங்கள் நிரந்தரமாகவும், 102 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.





பேங்க் ஆப் இந்தியா – காலிப்பணியிட விபரங்கள்


நிரந்தர பணியிட விபரங்கள்:


Economist - 2


கல்வித் தகுதி :


Post Graduation degree in Economics / Econometrics. மற்றும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 48170


Statistician - 2


Risk Manager – 2


Credit Analyst - 53


Credit Officers - 484


Tech Appraisal - 9


IT Officer – Data Centre – 42


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக பணியிட விபரங்கள்:


Manager IT - 27


Senior Manager IT - 29


Senior Manager – 15 (Network Security – 5, Network Routing & Switching Specialists – 10)


Manager – 31


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அந்தந்தப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும்.


வயது வரம்பு- அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 35- 38 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால்  senior manager பணிக்கு  விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.bankofindia.co.in/career என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 10,2022


விண்ணப்பக்கட்டணம்- பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 850ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 175.


தேர்வு செய்யப்படும் முறை :


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.  இந்த இரண்டு தேர்வுகளில் தகுதியாகும் நபர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://bankofindia.co.in/pdf/CORRECTED_FINAL.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.