திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)


பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


வழக்கு பணியாளர் (Case Worker)


மைய நிர்வாகி - (Centre Administrator)


கல்வி மற்றும் பிற தகுதிகள்


சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.


சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.


ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


வழக்கு பணியாளர் (Case Worker) - ரூ.30,000


மைய நிர்வாகி - (Centre Administrator) - ரூ.18,000


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட சமூக நல அலுவலகம்,


மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம்


திருவள்ளூர்


விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.09.2023


அறிவிப்பின் விவரம் அறிய - https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/09/2023091395.pdf


****


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ( Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research- Jipmer ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


Cardiographic Technician


Medical Laboratory Technologist


கல்வித் தகுதி:


இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. Cardiac Technology / Cardiac Laboratory Technician / Cardiac Catheterization Laboratory Technology படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.25,500 அளிக்கப்படும். 


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். 


தகுதித் தேர்வில் 100 MCQ  கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு நேரம் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 




விண்ணப்ப கட்டணம் :


இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


 www.jimper.edu.in-என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2023


https://jipmer.edu.in/sites/default/files/Advertisemnt%20Notice_1.pdf- என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



ஜிப்மர் இணையதள முகவரி: www.jimper.edu.in.


The Deputy Director (Admn.),
Administration – I (Rect. Cell)
JIPMER Administrative Block,
Dhanvantri Nagar P.O,
Puducherry - 605 006.


தொடர்புக்கு:


இ-மெயில் முகவரி- jipmergrpbandc@gmail.com


விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் சந்தேகம்  மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 91-7353945551 என்றில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டும் தொடர்பு கொள்ளலாம்.