வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பின் விவரம்:
மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு சீப்ப எழுத்தர் (Packer Clerk) பணியிடம், ஒரு தோட்ட காவலர் பணியிடம் (Garden Watchman), ஒரு தூய்மை பணியாளர் (Sanitary Worker) கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள ஆறு தூய்மைபணியாளர் (Sanitary Worker) பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு செயல்முறை தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வேலூர் பாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய சிறையில் நடைபெறவுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் (ஆண்கள் - Male மற்றும் பெண் – Female) பின்வரும் தகுதியுடைய உரிய கல்வி, ஜாதி சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை (Xerox) விண்ணப்பத்துடன் இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் சரிபார்த்தலில் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு, வேலுார் மத்திய சிறையிலிருந்து கடிதம் மூலம் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். செயல்முறை தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பங்கேற்று அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கல்வி தகுதி:
Packer Clerk:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் பணியில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் இருக்க வேண்டும்.
சமையல் பணி:
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் சமையலில் அனுபவம் இருக்க வேண்டும்.
தோட்ட பாதுகாவலர்:
தமிழ் படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Packer Clerk – Rs.15900 – 50400/- (Level 02)
Cook – Rs.15900 – 50400/- (Level 02)
Garden Watchman – Rs.15700 – 50000/- (Level 01)
Sanitary Worker – Rs.15700 – 50000/- (Level 01)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
வேலூர் – 632002
தேவையான ஆவணங்கள்:
பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.08.2022
கூடுதல் விவரங்களுக்கு.. http://prisons.tn.gov.in/recruitment.htm என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தொடர்புக்கு :
தொடர்பு எண்: 044-28521512 , 044-28521306
இ-மெயில்- tnprison@gmail.com