ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என  கால அட்டவணை வெளியாகியுள்ளது. 


ஆசிரியர் தகுதி தேர்வு:


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


2 ஆம் தாள்:


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.


அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். 


தேர்வு தேதி அறிவிப்பு:


இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என  கால அட்டவணை வெளியாகியுள்ளது.