தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் (National Thermal Power Corporation Limited) என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Tehri Hydro Development Corporation Limited)-THDC)-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சிவில், எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிகல் உள்ளிட்ட பிரிவுகளில் 109 இஞ்சினியர்கள்  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

 

 

 

கல்வித் தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் இளநிலை/ முதுநிலை படிப்புகளில் (B.E/B.Tech/B.Sc) & Master’sDegree (M.E./M-Tech/MS)  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

www.thdc.co.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி, முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

எவ்வளவு ஊதியம்:

 மாதம் ரூ.6000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க 600 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள்/ பழங்குடியினர் மற்றும் சில பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. 

தொடர்புக்கு:

இ-மெயில்- thdcrecruitment@thdc.co.in

தொடர்பு எண்:  0315-2473837 / 0315-2473412 (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 5:30வரை மட்டுமே அழைக்க வேண்டும்)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2022 

தேர்ந்தெடுக்கும் முறை:

இஞ்சினியரிங் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண், நேர்முக தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம், வயதுவரம்பு உள்ளிட்டவைகள் பற்றி கூடுதல் விவரம் அறிய https://thdc.co.in/sites/default/files/DETAIL_ADVT_ET_CME.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

ஆல் தி பெஸ்ட்!

https://thdc.co.in/new-openings என்ற லிங்கை கிளிக் செய்யும்

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.