தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (Tamil Nadu Generation and Distribution Corporation) உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- டெக்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ்
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 395
- எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமென்டேசன் பொறியியல் - 09
- கம்யூட்டர் / தகவல் தொழில்நுட்பம் பொறியியல் - 09
- சிவில் பொறியியல் - 15
- மெக்கானிக்கல் பொறியியல் - 50
மொத்த பணியிடங்கள் - 500
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இது ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி ஆகும்.
வயது வரம்பு விவரம்:
Apprenticeship சட்டத்தின்படி வயது வரம்பு விதிகள் பின்பற்றப்படும்.
தேர்தெடுக்கும் முறை:
இதற்கு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைகக்ப்படுவர். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 2020,2021, 2022, 20223 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை விவரம்:
இதற்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://nats.education.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் மாணவர் பதிவு செய்யும் போர்டலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.07.2024
இது தொடர்பான முழு விவரங்களை காண https://www.karmasandhan.com/wp-content/uploads/TANGEDCO-Apprentice-Recruitment-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.