தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தமிழக அரசு பணிக்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு டிசம்பர் 1- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
TANCOIR காலிப்பணியிடங்கள்:
Chief Executive Officer – 1
Associates (Internal Markets & Domestic Markets) – 6 பணியிடங்கள்
பணி இடம் - கோயம்புத்தூர்
கல்வி தகுதி:
AICTE அல்லது UGC போன்ற தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம்/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும்,இளங்களை பொறியியல், தொழில்நுட்ப துறையில் இளங்களை அல்லது முதுகலை பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளபடும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுவோரின் பணி அனுபவம், செயல் திறனின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று கொடுக்கப்படுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://fametn.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 01.12.2022
இது தொடர்பான விவரங்களை அறிய https://fametn.com/careers என்ற லிங்கை கிளிக் செய்து மைக்ரோசாஃப் வேர்டு -இல் உள்ள அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து காணலாம்.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி: https://fametn.com/
மேலும் வாசிக்க..