தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழக அரசு கொள்முதல் செய்த அனைத்து உணவு தானியங்களையும் சேமிக்கும் விதமாக தமிழ்நாடு அரசால் 1958-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் தான் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனமாகும். (Tamilnadu warehousing corporation). இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 57 இடங்களில் பெரிய அளவிலான 256 சேமிப்புக் கிடங்கிகள் உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய சேமிப்பு வசதிகளை விவசாயிகள் மற்றும் பிற வியாபார நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவும், விவசாயிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பொருட்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. .இதனை நிர்வகிக்க குழுமத்தலைவர் மற்றும் 5 இயக்குநர்கள் தமிழக அரசாலும், 5 இயக்குநர்கள் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பாகவும் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள்.


இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுபு்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதிகள் தேவை என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.



தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனப்பணிக்கான தகுதிகள்:


பதிவு எழுத்தர்: (Record clerk/Attender)


காலிப்பணியிடங்கள் – 2


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400/-


அலுவலக உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்: ( Office Assistant )


காலிப்பணியிடங்கள் – 13


கல்வித்தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் https://tnwc.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இறுதியில் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைந்து அஞ்சல் வாயிலாக வருகின்ற ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


பொது மேலாளர்,


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம்,


82, அண்ணா சாலை,


கிண்டி,


சென்னை -600 032.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள..