உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (TNRTP)  என்பது உலக வங்கியின் நிதியுடன் செயல்படும் திட்டமாகும். இந்தத் திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதாகும். குறிப்பாக இதன் மூலம் தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இதோடு வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை மக்களுக்கு அமைத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்,  ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்குமான நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்களை தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக இதன் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) , தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLP) மற்றும் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் ( TNPVP) நிறுவனமயமாக்கப்பட்ட நிதி முதலீடுகளை அடித்தளமாகக் கொண்டே இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது.


இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





காலிப்பணியிட விபரங்கள்:


மொத்த காலிப்பணியிடங்கள்- 324


துறை வாரியாக காலிப்பணியிட விபரம்:


Associate Chief Operating office ( MIS/S&J)  - 2


சம்பளம் – மாதம் ரூபாய் 1,00,000.


Deputy Chief operating office – 4


சம்பளம் – மாதம் ரூபாய் 75 ஆயிரம்.


Young professional – 58


சம்பளம் – மாதம் ரூ.45 ஆயிரம்.


Executive officer – 16


சம்பளம் – மாதம் ரூ.42,500


Block Team leader – 25


சம்பளம் – மாதம் ரூ.30ஆயிரம்.


Project Executive – 195


சம்பளம் – மாதம் ரூ.20ஆயிரம்.


Enterprise Finance Professionals – 24


சம்பளம் – மாதம் ரூ.50 ஆயிரம்.


கல்வித்தகுதி :


மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏற்றவாறு தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும், சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40 முதல் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு  https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.