தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor ஆக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே சட்டம் முடித்தவர்களாக இருந்தால் வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழகத்தில் பல்வேறுத் துறைகளின் கீழ் பணிபுரிவதற்கான நபர்களை முறையான போட்டித்தேர்வின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுவருகிறது. அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தேர்ச்சிபெறும் இளைஞர்களுக்கு இங்கு தான் நேர்காணல் நடைபெற்று வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor-ஆக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான கல்வி தகுதி என்ன? எந்த வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்? என இங்கு தெரிந்துகொள்வோம்.
Assistant Public Prosecutor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான தகுதிகள்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.எல் பட்டம் முடித்திருக்க வேண்டும் எனவும் பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் இத்தகைய தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனில் அவர்களுக்கான வயது அதிகபட்சம் 34-க்குள் இருக்க வேண்டும் என வேலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இது தொடர்பான விபரங்களை https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இதோடு ஆகஸ்ட் 25-ஆம் தேதிமுதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எழுத்துத்தேர்வில் தேர்வாகும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனையடுத்து இதில் தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு ரூ56100 - 177500/- வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டம் முடித்து வேலை தேடுபவர்களாக இருந்தால், மறக்காமல் தமிழக அரசின் Assistant Public Prosecutor பணிக்கு விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.