தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலி பணியிடங்கள்:


தமிழ்நாடு சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வரவேற்பாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தட்டச்சாளர்), அலுவலக உதவியாளர் / எழுத்தர், அலுவலக பியூன் (முன்ஷி / உதவியாளர்), துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மொத்தம் 201 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு ஏற்ப ஊதியமானது ரூ. 12,000 முதல் ரூ.40,000 ரூபாய் வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்திற்கு ஏற்ப விண்ணப்பத்திற்கான கடைசி தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 18 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://districts.ecourts.gov.in/tn மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , பதவி குறித்தும் விண்ணப்பம் குறித்தும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் , இந்த வலைதளத்தில் சென்று பார்க்கவும்.


Also Read: SSC GD Recruitment: 39,481 பணியிடங்கள், ரூ.69 ஆயிரம் ஊதியம்: எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?