திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில உள்ள திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.



திருவண்ணாமலை இந்துசமய அறநிலையத்துறை பணிக்கானத் தகுதிகள்:


அலுவலக உதவியாளர்


மொத்த பணியிடங்கள் - 3


கல்வித்தகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்- ரூ.15, 700- 50, 000


இரவுக்காவலர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி


 இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெறாவிடிலும் பரவாயில்லை.


மிதிவண்டி ஓட்டத்தெரிந்தவர்களாகவும், நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மாதம் ரூபாய் 15,700 முதல்50 ஆயிரம் என நிர்ணயம்


ஓட்டுநர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி:


8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். License with batch, நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மாதம் ரூபாய் 19,500- 62ஆயிரம் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கலப்புத்திருமணம், மாற்றுத்திறனாளி, விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் இப்பணியில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 37 வயது என நிர்ணயம்.


பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 32 வயது.


எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கு 18 வயது முதல் 34 வயது.


பிசி பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 34 என நிர்ணயம்.


விண்ணப்பிக்கும் முறை


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பம் முதலில் தயார் செய்துக்கொள்ள வேண்டும்.


மேலும் அதில், நீங்கள் எந்தப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ அந்தப்பணியை நீங்கள் குறிப்பிட வேண்டும். இதோடு மட்டுமின்றி விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.


 அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்:


விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி


எட்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றதற்கான சான்றிதழ்கள்.


பள்ளி மாற்று சான்றிதழ்


ஒட்டுநர் உரிமம்


சாதி சான்று நகல்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண்


குடும்ப அட்டை நகல் மற்றும் இதர தகுதிகள் இருந்தால் அதனையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


இணை ஆணையர்,


இந்து சமய அறநிலையத்துறை


4/15 காந்திநகர்,  7 வது தெரு,


திருவண்ணாமலை.


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – ஏப்ரல் 30, 2022


,இப்பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை, www.tnhrce.gov.in என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.