2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 2,599 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2ம் நிலை காவலர் பணி:


தமிழ்நாடு குரூப் 2 பணிக்கான காலியிடங்கள் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு 2ம் நிலை 2 கான்ஸ்டபிள் காவலர் பணிக்கான 2,599 காலிப்பணியிடங்களை நிரப்புமாறு தெரிவித்துள்ளார்.  


மேலும், 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிகளை நிரப்புவதற்கு, உடனடியாக தேர்வு குறித்தான அறிவிப்பை வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கூடிய விரைவில் 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பானை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்தான கூடுதல் விவரங்களை tnusrb.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் அறியலாம்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பு வீரர் என 3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் 295 மையங்களில் நடைபெற்றது.


தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை எழுத 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 2,99, 820 பேர் மட்டுமே தேர்வு எழுத, 66,908 பேர் தேர்வை எழுதவில்லை.  அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 81.76% பேர் தேர்வு எழுத, 18.24% பேர் தேர்வை எழுதவில்லை.






இந்நிலையில் 2023 ஆண்டுக்கான தமிழ்நாடு 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிக்கான பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பானை கூடிய விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: vAadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு


Also Read: Job Alert : வேலை வேண்டுமா? ரூ.50,000 வரை மாத ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!