இந்திய அஞ்சல் துறையில் Staff car driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நகரம் முதல் குக்கிராமங்கள் வரை எந்த இடத்திற்கும் தன்னுடைய சேவை திறம்பட செய்வதில் முக்கியத்துறையாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டுவருகிறது. குறிப்பாக 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகவும் அஞ்சல் துறை விளங்குகிறது. இதோடு மட்டுமின்றி மணி ஆர்டர், பதிவு தபால், ஸ்பீஸ்ட் போஸ்ட் என பல்வேறு முறைகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் கடிதங்கள் இந்தியாவின் எந்த முலையில் இருந்தாலும் கொண்டு சேர்க்கப்பட்டுகிறது. அதுவும் எவ்வித தாமதமும் இன்றி செயல்படும் சிறந்த துறையாகவும் இது உள்ளது.


இதுப்போன்ற சேவைகள் மட்டுமில்லாமல், செல்வமகள், மாதாந்திர வருமான திட்டம், ஆர்டி, எப்டி போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்களையும் இந்திய  அஞ்சல்துறைக் கொண்டுள்ளதால் பலர் இதனால் பலனடைந்துவருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு நிறுவனமான இந்திய அஞ்சல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை நம்மில் பலரும் இருக்கும். இந்நிலையில் ஒவ்வொருவரின் கனவை நினைவாக்கும் விதமாக அவ்வப்போது பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகிவரும் நிலையில், தற்போது Staff car driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி  போன்ற மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கானத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





இந்திய அஞ்சல்துறை பணிக்கானத் தகுதிகள்:


பணி – Staff car driver


காலிப்பணியிடங்கள் – 17


பணியிடம் – கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி


வயது வரம்பு – இந்திய அஞ்சல்துறையில்  மேற்கண்ட மாவட்டங்களில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியடங்களுக்கு ஆஃப்லைன் மூலம் வருகின்ற மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


The Manager Mail Motor Service,


Goods Shed Road,


Coimbatore – 641001.


தேர்வு செய்யும் முறை:


இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், Merit ListCertificate Verification மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் :


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 62 ஆயிரம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே மத்திய அரசுப்பணியில் சேர விரும்பம் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.