TANUVAS Walk in Interview:
தேனியில் உள்ள வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் அலுவலகத்தில் உள்ள “Assessment of Indigenous Medication against Subclinical Mastitis condition in dairy cows” என்ற திட்டத்தில் உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி விவரம்:
திட்ட உதவியாளர்
பணியிடம் : தேனி
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கால்நடை அறிவியல் / பி.டெக்., பி.எஸ்.சி., பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மாலிகுலர் பயோலஜி ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் / Life Science பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Soundbooth – CS3 & CS 5, Audacity உள்ளிட்ட சாஃப்வேர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு வயது வரம்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் முலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
The Department of Veterinary and
Animal Husbandry Extension
Education, Veterinary College and
Research Institute, Theni.
இணையதள முகவரி : www.tanuvas.ac.in
நேர்காணல் நடைபெறும் நாள்: 31.10.2023 காலை 11.00 மணி முதல்
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1697724480.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.