தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் கிராம செவிலியர் / துணை செவிலியர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நாளை(31.10.2023) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




பணி விவரம்:


 ஆய்வக உதவியாளர் (AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE )


மொத்த பணியிடங்கள் - 2250


கல்வித் தகுதி :


இதற்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஓராண்டுகால Auxiliary Nurse Midwifery படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். 


18 மாதங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-8)


வயது வரம்பு விவரம் :


இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 




தேர்வு செய்யப்படும் முறை :


 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2023


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


சென்னை ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு


சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்


கல்வி மற்றும் பிற தகுதிகள் 


B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பணி காலம்


இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 


ஊதிய விவரம்


இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.11.2023



இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 


தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Technician%20and%20Project%20associate%20-%20Advt-180.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.