திரைத்துறை சம்பந்தமான படிப்புகளில் முதலாமாண்டு சேருவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.


 கலை படிப்புகள்:


2022-23 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான நான்கு ஆண்டு காலம், கலை படிப்புகளில் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு எம்.ஜீ.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


பட்டப்படிப்புகள்:



  1. இளங்கலை- காட்சிக்கலை ( ஒளிப்பதிவு)

  2. இளங்கலை- காட்சிக்கலை ( எண்மிய இடைநிலை)

  3. இளங்கலை- காட்சிக்கலை ( ஒளிப்பதிவு)

  4. இளங்கலை- காட்சிக்கலை ( இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்)

  5. இளங்கலை- காட்சிக்கலை( படத்தொகுப்பு )

  6. இளங்கலை- காட்சிக்கலை( உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)


விண்ணப்பிக்கும் முறை:


முதலில் விண்ணப்ப படிவத்தை Tamil Nadu Government Portal (tn.gov.in)இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழ்கண்ட முகவரியில் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து மீண்டும் அதற்கான முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


முகவரி:


The principal,


Tamilnadu government MGR film and television institute,


Tharamani,


Chennai- 600113.


விண்ணப்ப படிவம் கிடைத்தவுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்


அனுப்ப வேண்டிய முகவரி:


The principal,


Tamilnadu government MGR film and television institute,


Tharamani,


Chennai- 600113.


குறிப்பு:


*ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்


*24-06-2022 க்கு முன்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது


*24-06-2022 முதல் 22-07-2022 வரை விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்


*விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 27-07-2022, மாலை 5 மணிக்குள்


மேலும் படிப்புகள் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும்  விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த புகைப்படத்தை பார்க்கவும்.




Also Read: Sudha Ragunathan : அமெரிக்காவில் பாடகி சுதா ரகுநாதன் தினம் அறிவிப்பு.. கெளரவித்த நியூயார்க் மேயர்


Also Read: SBI பணி ஓய்வு பெற்றவர்களுக்கு காத்திருக்கு எஸ்.பி.ஐ வேலை.. எப்படின்னு கேக்குறீங்களா? இதை படிங்க..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண