தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உதவி ஆசிரியர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.


பணி விவரம் 


உதவிப் பேராசிரியர்


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க M.B.A. (HRM) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். BBA  படித்திருக்க வேண்டும். NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Ph.D. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


MBA + NET - ரூ.40,000/-


MBA + Ph.D.+ MBA - ரூ.45,000/-


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Dean i/c, (Basic Sciences),
Institute of Fisheries Post Graduate Studies, OMR, 
Vaniyanchavadi,
Chennai - 603 -103


பணியிடம்


TNJFU - Fisheries Business School,
Muttukadu, ECR,
Chennai


****


சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்


இடைநிலை ஆசிரியர் (தலைமை ஆசிரியர்)


பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல்)


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல், இயற்பியல், வரலாறு, வேதியியல்)


மொத்த காலிப்பணியிடங்கள் -11


பணி இடம்:


அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி , விருகம்பாக்கம், சென்னை


அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வளசரவாக்கம், சென்னை 


அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வடபெரும்பாக்கம், சென்னை  (ஓராசிரியர் பள்ளி)


அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி. மதுரவாயல், திருமங்கலம், கன்னிகாபுரம்


கல்வித் தகுதி 


இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலாக பணிபுரிந்து வருபவர்கள்


இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை


வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். (TET)


பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள். அருகாமை மாவட்டத்தில் வசிப்பர்களும் இதற்கு விண்ணப்பிகலாம்.


ஊதிய விவரம்:


இடைநிலை ஆசிரியர் - ரூ.12,000/-


தலைமை ஆசிரியர் -ரூ.12,000/-


பட்டதாரி ஆசிரியர் - ரூ.15,000/-


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் - ரூ.18.000/-


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியகரத்தில் 2-ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.09.2023 மாலை 5.45 மணிக்குள் 


மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • ஜூனியர் அதிகாரி

  • ஜூனியர் அலுவலர்

  • மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்

  • பயிற்சியாளர் (வேளாண்மை)

  • பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)

  • பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)

  • பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)

  • பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)


மொத்த பணியிடங்கள்: 89


கல்வித் தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000


மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் -  ரூ.55,680


பயிற்சியாளர் - ரூ.23,664


தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023


வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்த கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.