தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்பாடும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)  ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகராக செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனி புறநகர் பகுதிகளில் வேலை செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


பணி விவரம்


கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி 


பணி இடம்:


தேனி 


கல்வித் தகுதி:


அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்


வயது வரம்பு: 


 இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வய்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)


தேர்வு செய்யப்படும் முறை:


நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


General Manager, 
Theni District Cooperative Milk Producer's Union Ltd,
Theni


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 13.09.2023  காலை 10 மணி முதல்


****


திருப்பூர் மாநாகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் (NUHM) செயல்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள்

  • ஆய்வக நுட்புநர்

  • மருத்துவமனை பணியாளர் 


கல்வித் தகுதி:


செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க B.Sc. நர்சிங் / Auxillar Nurse Midwife Course , General Nursing and Midwife என்ற துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 


ஆய்வக நுட்புநர் பணிக்கு ’Medical labaratory Technology துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 


மருத்துவமனை பணியாளர் பணிக்கு எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள் - ரூ.14,000

  • ஆய்வக நுட்புநர் - ரூ.13,000

  • மருத்துவமனை பணியாளர் -ரூ.8,500


கவனிக்க..



  • பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது.

  • நேர்காணலில் தகுதி பெற்று காத்திருக்கு பட்டியில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்திற்குள் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

  • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

  • பணியின்தன்மையானது முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலான தற்காலிகப் பணியாகும்


தேர்வு செய்யப்படுவது எப்படி?


திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் காலை 10 மணிமுதல் மதியம் 3 மணிவரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் (2 எண்ணிக்கை) கலந்து கொள்ளலாம். 


தொலைபேசி எண் - 0421 -2240153


நேர்காணலின்போது கீழ்க்காணும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.



  • 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • கல்விச் சான்றிதழ்

  • தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ் 

  • ஆதார் அட்டை நகல்

  • குடும்ப அட்டை நகல் 


நேர்காணல் நடைபெறும் நாள் - 11.09.2023


நேர்காணல் நடைபெறும் இடம்


சுகாதாரப் பிரிவு


மாநகராட்சி அலுவலகம்


திருப்பூர்