வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் 


சென்னையிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவல்கத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர் - 6


காவலர் - 2


கல்வித் தகுதி:


அலுவலக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


உரிய உடற்தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் பொதுப்பிரிவினருக்கு 32-வயது மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


கிண்டியில் உள்ள அலுவலகத்தில் அரசு பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப்படிவத்தை பெற்றுகொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


துணை இயக்குநர் (நிர்வாகம்)


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு)


எண்.42. ஆலந்தூர் ரோடு, 


திரு.வி.க. தொழிற்பேட்டை,


கிண்டி,


சென்னை -600 032


விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.08.2023  மாலை 5 மணி வரை 


********


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணிகளுக்கு இன்று மதியம் 1 மணி முதல் செப்டம்பர் 18- ம் தேதி 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


ஓட்டுநர் 


நடத்துனர்


கல்வித் தகுதி:


எட்டாம் வகுப்பு, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு www.arasubus.tn.gov.in - என்ற இணையதள முகவரி இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்க கடைசி தேதி- 18.09.2023


இந்த வேலைவாய்ப்பிற்கா கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் குறித்த அப்டேட்களை http://www.arasubus.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியில் காணலாம்.


***


சவுதி அரேபிய அமைச்சத்தில் பெண் செவிலியர்களாக பணி செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான் முழு விவரங்களை இங்கே காணலாம்.


சவுதி அரேபியாவில் வேலை


தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நேர்காணல் நடைபெறுவதன் விவரம்


சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இதற்கு விண்ணப்பிக்க - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 


ஊதிய விவரம்:


இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


தொடர்பு எண்கள்


9566239685, 6379179200


044-22505886 - 044-22502267 


இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.   அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது என்று அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.