இந்திய அஞ்சல் கட்டண வங்கி (India Post Payments Bank - IPPB) துறையில் கிராமின் டாக் சேவக் (GDS) நிர்வாகி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை, டிகிரி போதும்!

இந்திய அஞ்சல் கட்டண வங்கி (India Post Payments Bank - IPPB) துறையில் கிராமின் டாக் சேவக் (GDS) நிர்வாகி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல் பட்டப்படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 17 பணியிடங்கள் உள்ளன.

Continues below advertisement

முக்கிய விவரங்கள்:

  • பதவியின் பெயர்: GDS நிர்வாகி (Executive - GDS)
  • மொத்த காலிப்பணியிடங்கள்: 348
  • தமிழ்நாட்டில் காலியிடங்கள்: 17
  • சம்பளம்: மாதம் ரூ.30,000

வேலை இடங்கள் (தமிழ்நாடு):

சென்னை, கடலூர், கரூர், திருச்சி, திருவாரூர், உடையர்பாளையம், காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, தல்லாகுளம், தேனி, சார்ரிங் கிராஸ், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பணியிடங்கள் உள்ளன.

தகுதி:

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (நேரடி அல்லது தொலைதூரக் கல்வி மூலமாக) முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் தற்போது இந்திய அஞ்சல் துறையில் GDS பணியில் இருந்துவர வேண்டும்.
  • வயது வரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் (01.08.2025 தேதியின்படி).

தேர்வு முறை:

  • நேரடி எழுத்துத் தேர்வு இல்லை.
  • பட்டப்படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
  • தேவைக்கேற்ப ஆன்லைன் தேர்வு நடத்தும் உரிமை வங்கிக்கு உண்டு.

பணியின் காலம்:

தொடக்கத்தில் 1 ஆண்டு, தேவையின்படி மேலும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்த பதவிகள் நிரந்தரமற்றவை.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம்: ₹750
  • கடைசி நாள்: 29.10.2025

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பிக்கும் கால வரம்பு : 09.10.2025 தேதி முதல் 29.10.2025 வரை, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் அரசு சார்ந்த சீரான வேலைவாய்ப்பை நாடும் GDS பணியாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.