மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 'செலக்ஷன் போஸ்ட் ஃபேஸ் 14' (Selection Post Phase 14 - 2026) அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியான பதவிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 11 முதல் 13ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும்முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC-யின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், மற்றும் ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித் தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
எவ்வளவு மதிப்பெண்கள்?
கணினி வழியிலான எழுத்துத் தேர்வுஅடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேள்விகள் கொள்குறி வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற, ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாகும். அதன்படி:
- பொதுப் பிரிவினர் - 30%
- ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் - 25%
- எஸ்சி/ எஸ்டி மற்றும் இதர பிரிவினர் - 20% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு எப்போது?
இந்தத் தேர்வு ஜூன் மாதம் உத்தேசமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 309 3063 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தேர்வர்கள் தொடர்புகொள்ளலாம்.
கடைசி நாள்களில் இணையதளத்தில் ஏற்படும் சர்வர் நெரிசலைத் தவிர்க்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களை அறிய: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
