எஸ்எஸ்சி எனப்படும் மத்திய ஆட்சேர்ப்பு தேர்வு வாரியம், மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs), எஸ்எஸ்எஃப் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் ரைபிள்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அண்மையில் வெளியிட்டது.

Continues below advertisement

இதன்படி 2026ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் ஜி.டி. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க நாளை (டிசம்பர் 31) கடைசித் தேதி ஆகும்.

காலிப் பணியிட விவரங்கள்

இந்த செயல்முறை மூலம் மொத்தம் 25,487 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்னென்ன பிரிவுகளில்?

Continues below advertisement

  • சிஐஎஸ்எஃப் (CISF): 14,595
  • சிஆர்பிஎஃப் (CRPF): 5,490
  • எஸ்எஸ்பி (SSB): 1,764
  • அஸ்ஸாம் ரைபிள்ஸ்: 1,706
  • ஐடிபிபி (ITBP): 1,293
  • பிஎஸ்எஃப் (BSF): 616
  • எஸ்எஸ்எஃப் (SSF): 23

10ஆம் வகுப்பு போதும்

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இக்கல்வித் தகுதியை 2026 ஜனவரி 1ஆம் தேதிக்குள் முடித்திருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விண்ணப்பக் கட்டணத்தை யுபிஐ, நெட் பேங்க்கிங், கார்டுகள் ஆகியவை மூலமாக ஆன்லனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  1. https://ssc.gov.in./homeஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் பதிவு செய்து (Register) லாகின் செய்யவும்.
  3. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைச் செலுத்தவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைச் சமர்ப்பித்து, உறுதிப்படுத்தல் பக்கத்தை (Confirmation page) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

கடைசி நாட்களில் இணையதளத்தில் அதிக நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று எஸ்எஸ்சி எனப்படும் ஆட்சேர்ப்பு தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_01122025.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து அறியலாம். 

பிற விவரங்களுக்கு: https://ssc.gov.in/login