வாலிபர்கள் கவனத்திற்கு... மத்திய அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் போட்டித் தேர்வுகளை எழுதி வருபவர்களா நீங்கள். இதோ... மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஜூலை 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. உடனே விண்ணப்பித்து விடுங்கள். 

இந்த பணிகளுக்கான தகுதி மற்ற விபரங்கள் இங்கே...

பணி: Lower Division Clerk (LDC), Secretariat Assistant (JSA)

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

காலியிடங்கள் : 3,131

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

அதாவது 2 ஜனவரி 1999-க்கு முன்போ 1 ஜனவரி 2008-க்குப் பின்போ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. அரசு அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படுமும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 8.9.2025, 18.9.2025, இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி பிப்ரவரி-மார்ச் (2026)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2025. இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. எனவே காலதாமதம் செய்யாமல் தகுதியான வாலிபர்கள் உடனே தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி தகுதி தேர்வில் உங்களை நிரூபித்து மத்திய அரசு பணியில் சேர்ந்திடுங்கள்.