வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவும் உள்ள வாலிபர்கள் கவனத்திற்கு.... பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்)

மொத்த காலியிடங்கள்: 541

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

தகுதி: 30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதாவது 1.4.2004-க்கு பின்போ,2.4.1995-க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மற்றும் தேர்வு மையம்: முதல் நிலைத்தேர்வு ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் - சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: அக்டோர், நவம்பர் 2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi. co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.7.2025

இன்னும் 2 வாரமே இருக்கிறது. எனவே தாமதம் செய்யாமல் உங்கள் கனவை நிறைவேற்ற காத்திருக்கும் வேலை வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய உழைத்திடுங்கள்.

இந்திய விமானப்படை வேலை வாய்ப்பு

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 284

பணி: AFCAT Entry - Flying

பணி: AFCAT Entry - Ground Duty (Technical)

பணி: AFCAT Entry - Ground Duty (NonTechnical)

பணி: NCC Special Entry (Flying)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பிளையிங் (1.7.2026 தேதியின்படி 20 முதல் 24-க்குள்ளும், கிரவுண்ட் டூட்டி 20 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2000 முதல் 1.7.2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://afcat. cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500 + ஜிஎஸ்டி

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2025 நாளைதான் கடைசி நாள். எனவே வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து உங்கள் வாழ்க்கை தடத்திற்கு வலுவான பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்.