புது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு- 2022”க்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) வெளியிட்டுள்ளது.


புதுடெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர், தலைமை காவலர், இணை உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான காலிபணியிடங்களுக்கு தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.  இந்தியா, நேபாளம், பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பதவிகளுக்கு விண்ணபிக்க 30 வயதிற்குட்பட்டோராக இருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:


இந்தத் தேர்வுக்கு விண்ணபிக்க தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இதை BHIM2, ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்டவைகள் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பங்கள் அனைத்தும் வளைதளமான https://ssc.nic.in/ என்பதில் ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். 


ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: 30.08.2022 / இரவு 11 மணி.


ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 31.08.2022 (இரவு 11 மணி ) 


எப்படி விண்ணப்பிப்பது:


ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள் கண்ணாடி அணியாமல் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் மையங்கள்:


இதற்கான தேர்வுகள் நாடு முழுவதும் 21 மையங்களில் நடைபெற உள்ளன. ஆந்திரபிரதேசத்தில் 10 மையங்கள், தமிழ்நாட்டில் 7 மையங்கள், புதுச்சேரியில் ஒரு மையம் மற்றும் தெலங்கானாவில் 3 மையங்களில் நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் திரு கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எத்தனை காலி பணியிடங்கள், இடஒதுக்கீடு, வயதுவரம்பு உள்ளிட்ட பல தகவல்களை தெரிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர