பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC) ) வெளியிட்டிருந்தது. 577 பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம் :


Assistant Provident Fund Commissioner -418


 Enforcement Officer/Accounts Officer - 159


மொத்த பணியிடங்கள் - 577


கல்வித் தகுதி: 


இந்தப் பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு Level- 10 in the Pay Matrix as per 7th-CPC- படி மாத ஊதியம் வழங்கப்படும். 


பணியிடம்:


இந்தப் பணிக்கு தேர்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 


PROBATION :


இரண்டு ஆண்டுகால புரோபேசன் காலத்திற்கு பிறகு பணி திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும்.


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில்  அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். 


தேர்வு முறை:


இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவர். 


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்



இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியாக ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 


தேர்வு மையங்கள்:


தமிழ்நாட்டில் திருச்சி ,மதுரை, கோயம்புத்தூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு எழுதலாம். மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும். 


விண்ணப்ப கட்டணம் 


இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும்.  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். யு.பி.ஐ., கிரெடிட் கார்ட், மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்தலாம். 


இரண்டு பணிகளுக்கும் விண்ணபிக்க விரும்புவோர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.


பட்டியலின / பழங்குடியின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், மகளிர் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.03.2023 


எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு யு.பி.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- விவரம் வெளியிடப்படும்.


ஊதிய விவரம், கல்வித் தகுதி உள்ளிட்டவைகள் குறித்த முழு விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க.


Job Alert: மாதம் ரூ.60 ஆயிரம் வரை ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பணி விவரத்திற்கு இதைப் படிங்க!


மேலும் வாசிக்க. - TNPSC CESE: மாசம் ரூ.1.30 லட்சம் சம்பளம்; தமிழ்நாடு அரசில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!