மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர்,தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பபடுவதாக மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு SSC தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களாக வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? தேவை என்பதை நாம் அறிந்துக்கொள்வோம்.





பணியிடங்களின் விபரங்கள்:


Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)


Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)


Data Entry Operator (DEO)


Data Entry Operator, Grade ‘A’


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு சில பணிகளுக்கு மட்டும் அதற்கேற்றால் கூடுதல் தகுதிகள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


பொதுப்பிரிவினருக்கு ரூ.100ம்  எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.


தேர்வு செய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


கணினி வழித் தேர்வானது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.


அடுத்ததாக எழுத்துத்தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் தேர்வு கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமைந்திருக்கும்.


திறனறி தேர்வானதில், தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விவரம்:


Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200)


Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 (Rs. 25,500-81,100)


Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)


Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100)


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.