தெற்கு ரயில்வேயின் (Southern Railway) கோயம்புத்தூர், சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய கோட்டங்களில் உள்ள ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃபிட்டர், மெக்கானிக், கார்பெண்டர், வெல்டர், வொயர்மேன், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தொழில்நுட்ப புரோகிராமிங் உதவியாளர் ஆகிய துறைகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி. மறந்துடாதீங்க..
பணி விவரம்:
Trade Apprentice
கோயம்புத்தூர் ரயில்வே கோட்டத்தில் உள்ள பணி விவரம்:
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள பணி விவரம்:
பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் பணி விவரம்:
சேலம் ரயில்வே கோட்டத்தின் பணி விவரம்:
மொத்த பணியிடங்கள் : 1264
கல்வித் தகுதி:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு 15 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும் 24 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி காலம்:
டீசல் மெக்கானிக் - 2 ஆண்டுகள்
ஃபிட்டர் (Freshers)- இரண்டு ஆண்டுகள்
வெல்டர், வொயர்மேன் உள்ளிட்ட பிற பதவிகளுக்கு ஓராண்டுகாலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596887702-PTJ_ActApprentices_Notification2022.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.10.2022
கவனிக்க..
இது தொடர்பாக அலுவலக தொடர்பு ரெயில்வே துறையின் ’ National Informatics Centre’ - “NICSMS”- இன் மெசேஜ் மூலமானவும், “cwperactapp@gmail.com” என்ற இ-மெயில் முகவரி மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in என்ற லிங்க்கில் கூடுதல் விவரங்களை பெறலாம்.
இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.