கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர், டி,ஜி.டி. பி.ஜி.டி, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:


பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 


நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 


புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 




பணி விவரம்:



  • இந்தி ஆசிரியர் -Primary Teacher (Hindi)

  • சமஸ்கிருதம் - Trained Graduate Teacher (Sanskrit)

  • உயிரியியல் ஆசிரியர்PGT (Biology)

  • பொருளியல் ஆசிரியர் PGT (Economics)


கல்வித் தகுதி: 



  • பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

  • இந்தி ஆசிரியர்  பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும். 

  • சமஸ்கிருதம் பணிக்கு மூன்றாண்டு கால பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • உயிரியியல் ஆசிரியர் பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

  • இதற்கு உயிரியியல், விலங்கியல், லைஃப் சயின்சஸ், ஜெனிடின்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • பொருளியல் ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.எட் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:



  • இந்தி ஆசிரியர் -Primary Teacher (Hindi) - ரூ.21,250

  • சமஸ்கிருதம் - Trained Graduate Teacher (Sanskrit) - ரூ.26,250

  • உயிரியியல் ஆசிரியர்PGT (Biology) - ரூ.27.500

  • பொருளியல் ஆசிரியர் PGT (Economics) - ரூ.27,500


இந்த பணிகளிக்கு அதிகபட்ச வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. நேர்காணல் அன்று தெரிவிக்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க மதுரையில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 


கவனிக்க...


நேர்காணலுக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, கல்வி சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் நாள்: 24.06.2023 / சனிக்கிழமை


இடம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகம், திருப்பரங்குன்றம், மதுரை.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருக்கும் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களுக்கு https://no2madurai.kvs.ac.in/ - என்ற இணையதள முகவரில் காணலாம். 


இந்த அறிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://no2madurai.kvs.ac.in/sites/default/files/WALK%20IN%20INTERVIEW%2024%20JUNE%202023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.