நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India) உள்ள 55 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மேலாளர் பணிக்கு ( Manager- (Credit Analyst)) SPECIALIST CADRE OFFICER என்ற பிரிவில் பணியிடம் நிரப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


மேலாளர் பணிக்கு ( Manager- (Credit Analyst))வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலோ பல்கலைக்கழகத்திலோ பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 


MBA, ) MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA ஆகிய படிப்புகளை முழு நேரமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளில் கிரேடிக்ட் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பது சிறப்பு. 


’Analysis of Balance Sheet / Appraisal / Assessment of Credit Proposal, Credit monitoring’ ஆகியவைகள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


Middle Management Grade Scale – III-இன் படி  ரூ. 63, 840 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 
இது அவர்கள் குறிப்பிட்டுள்ள ஊதிய விவரம்- 63, 840-1990/5-73790-2220/2-78230)


PROBATION PERIOD:


மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகள் புரோபேசன் காலத்திற்கு பிறகே பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


பணிகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு,  நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்து கொள்வது நல்லது.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பத்தாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமெ செலுத்த வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2022


தேர்வு கட்டணம், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள், டிரான்ஸ்பர் கொள்கைகள், பணியின் தன்மை என்ன? மெரிட் லிஸ்ட் ஆகியவற்றின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/211122-ADV_RAW_NEW_FINAL_1.pdf/3b0aef3d-05dd-e10c-2c02-a6599cb5d79f?t=1669028562758 என்ற லிங்கை கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும்.


பாரத ஸ்டேக் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள https://sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கில் காணலாம்.


கவனிக்க:


விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது. 


நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/