நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. 'Business Correspondent Facilitator’பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.    இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்  என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ.வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.


பணி விவரம்:


Business Correspondent Facilitator


கல்வித் தகுதி: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் / எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். திறம்பட வேலை செய்ய வேண்டும்.மேலே குறிப்ப்பிட்டுள்ள பணிகளுக்கு தேவையான சிறப்பு திறன்களை கொண்டிருக்க வேண்டும்.


பணி இடம்:


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பை, அகமதாபாத். புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், ஜெய்பூர், பாட்னா, அமராவதி, புது டெல்லி, கொல்கத்தா, கெளகாத்தி, பெங்களுரூ, லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையிலும் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


வயது வரம்பு:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.05.2017 -இன் படி 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  30 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :


இந்தப் பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் தொடக்க ஊதியமாக வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி? 


https://bank.sbi/careers- அல்லது https://www.sbi.co.in/web/careers - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:'


நிரந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும். 


நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


பணி காலம்:


இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கவனிக்க:


விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது. 


நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/ - என்ற இணைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2023


இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/25386736/090323-Business+Correspondent+Facilitators-FI.pdf/af72ec54-3250-6144-0b22-9787bdbc5dbb?t=1678367431403- என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.