நாட்டின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள 1,500 புரோபேஷனரி ஆபீசர் (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Advertisement No. CRPD/PO/2026-27/09) வெளியிட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக வந்துள்ள இந்த அறிவிப்பு மூலம் நடத்தப்படவுள்ள தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் 'ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-I' (Junior Management Grade Scale-I) பிரிவின் கீழ் வங்கி அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

Continues below advertisement

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Graduation in any discipline) பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கான ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொத்தமுள்ள 1,500 பணியிடங்களில் வழக்கமான மற்றும் முந்தைய ஆண்டுகளின் காலிப்பணியிடங்களும் (Regular and Backlog posts) உள்ளடக்கப்பட்டுள்ளன. சமூகப் பிரிவு வாரியான இட ஒதுக்கீடு விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:

Continues below advertisement

பிரிவு - பொதுப் பிரிவு (UR) , காலிப்பணியிடங்கள் - 588, OBC-390,SC-234,ST-144,EWS -144.

மொத்தம்  1,500 தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, முதற்கட்டத் தேர்வு ஆகஸ்ட் 2026-லும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் 2026-லும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உளவியல் அளவீட்டுத் தேர்வு (psychometric test), குழுச் செயல்பாடு மற்றும் நேர்காணல் ஆகியவை அக்டோபர் மற்றும் நவம்பர் 2026-ல் நடைபெறவுள்ளன. இறுதி முடிவுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு அட்டவணை மற்றும் முக்கிய தேதிகள் எஸ்பிஐ பிஓ பணிக்கான தேர்வுகள் மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முழுமையான விவரங்கள் :

    அறிவிப்பு வெளியாகும் தேதி: 18 ஜூன் 2026    ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 18 ஜூன் 2026    ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 8 ஜூலை 2026    கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: 8 ஜூலை 2026    முதற்கட்டத் தேர்வுக்கான அனுமதி அட்டை: ஜூலை 2026-ன் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம்    முதற்கட்டத் தேர்வு: ஆகஸ்ட் 2026    முதற்கட்டத் தேர்வு முடிவுகள்: ஆகஸ்ட்/செப்டம்பர் 2026    முதன்மைத் தேர்வுக்கான அனுமதி அட்டை: ஆகஸ்ட்/செப்டம்பர் 2026    முதன்மைத் தேர்வு: செப்டம்பர் 2026    முதன்மைத் தேர்வு முடிவுகள்: செப்டம்பர்/அக்டோபர் 2026    உளவியல் அளவீட்டுத் தேர்வு (Psychometric test): அக்டோபர்/நவம்பர் 2026    குழுச் செயல்பாடு மற்றும் நேர்காணல்: அக்டோபர்/நவம்பர் 2026    இறுதி முடிவுகள்: நவம்பர்/டிசம்பர் 2026

முதலில் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பக்கமான SBI Careers போர்ட்டலுக்குச் செல்லவும்.உங்களின் அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்து புதிய பயனராகப் பதிவு செய்து, உங்களுக்கான லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளவும்.உருவாக்கப்பட்ட லாகின் ஐடி மூலம் உள்நுழைந்து, உங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் முகவரி விவரங்களைச் சரியாக நிரப்பவும்.கேட்கப்பட்டுள்ள அளவுகளில் உங்களின் புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature), இடது கை பெருவிரல் ரேகை (Thumb impression) மற்றும் தேவையான சான்றிதழ்களைத் தெளிவாகப் பதிவேற்றம் செய்யவும்.ஆன்லைன் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.இறுதிச் சமர்ப்பிப்புக்கு (Final Submission) முன் அனைத்து விவரங்களையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, ஜூலை 8-க்குள் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உறுதிப்படுத்தல் பக்கத்தையும் (Confirmation page), கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் (Fee receipt) எதிர்காலத் தேவைக்காகப் பிரிண்ட் அவுட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) 'புரோபேஷனரி ஆபீசர்' (PO) அல்லது பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்படும் விண்ணப்பதாரர்கள், ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக ரூ 48,480 -ஐ பெறுகிறார்கள்.