பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி வாரமே கடைசியாகும்.
பணி விவரம்:
ப்ரோபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers)
மொத்தப் பணியிடங்கள்- 2000
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 31.12.2023 -ன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:
இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
கவனிக்க :
ஆன்லைன் பதிவு செய்தல்: 07.09.2023 முதல் 27.09.2023 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;
தேர்வுக்கான பயிற்சி : நவம்பர் 2023
முதல்நிலை எழுத்துத் தேர்வு: நவம்பர் /டிசம்பர், 2023
முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 / நவம்பர்
திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி
திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - பிப்ரவரி / மார்ச், 2023
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ஊதிய விவரம்:
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.
முதல் நிலை தேர்வு:
முதன்மை தேர்வு:
இறுதித் தேர்வு:
எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:
எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://bank.sbi/careers / https://www.sbi.co.in/careers
முக்கிய தேதிகள்
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/060923-1_detailed+Advt.+English+PO+23-24_07.09.2023.pdf/9c9b6e4b-9fdd-df11-3194-d40cdb336aac?t=1694002437061 -லிங்கை கிளிக் செய்யவும்.
******
கோயம்புத்தூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (CENTRAL INSTITUTE FOR COTTON RESEARCH) உள்ள வேலைவாய்ப்பிற்கு வரும் 21-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
பணி விவரம்:
Senior Research Fellow
Young Professional - I
கல்வித் தகுதி:
சீனியர் பணியிடத்திற்கு M.sc. Agricultural Entomology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
கோயம்புத்தூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் தரவுகளை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
Young Professional பணிக்கு B.Sc. Agriculture / Botany/ Zoology உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Senior Research Fellow - ரூ.31,000
Young Professional - I - ரூ.25,000
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்- 21.09.2023 காலை 9.30 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் -
Indian Council of Agricultural Research)
Regional Station,
Coimbatore-641 003