பொதுத்துறை வங்கி எஸ்பிஐ:


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  ஆட்களை நியமிப்பதற்கான ஒரு புதிய அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: specialist cadre officer


தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்,சில பணிகளுக்கு MBA முடித்திருக்க வேண்டும், சில பணிகளுக்கு அனுபவம் இருக்க வேண்டும், அதனால் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று, விண்ணப்ப குறிப்பில்,  பணிக்குரிய தகுதி உள்ளனவா என சரி பார்த்துக் கொள்ளவும்


வயது: 24 வயது முதல் 65 வயது வரை


சம்பளம்: 20 லட்சம்- முதல் 50 லட்சம் வரை


பணி செய்யும் இடம் : இந்தியா முழுவதும்                


விண்ணப்ப கட்டணம்: SC/ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை; இதர பிரிவினருக்கு – ரூ. 750


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13


காலியிடங்கள் - 11


விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வாயிலாக



  • முதலில் STATE BANK OF INDIA (sbi.co.in) " rel="dofollow">STATE BANK OF INDIA (sbi.co.in) என்ற லிங்கில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விண்ணப்ப குறிப்பினை தெளிவாக படிக்கவும். பின் பணிக்குரிய தகுதி இருப்பின் விண்ணப்பிக்கவும்

  • பின்னர் Home - Careers (bank.sbi) " rel="dofollow">Home - Careers (bank.sbi) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அங்கு முழு விவரங்களையும் கவனத்துடன் படிக்கவும்

  • பின்னர் தேவையான அனைத்து தகவல்களையும் கவனத்துடனும் எவ்வித பிழையும் இன்றி பூர்த்தி செய்யவும்

  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்

  • பின் உங்களது விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்


தேர்வு செய்யப்ப்டு முறை:



  • பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

  • நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.


Also Read: Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இந்த ஆண்டின் எழுத்தர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண