சேலம் மாவட்டத்தின் மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், சேலம், சேலம் தெற்கு வட்டம், சேலம் மேற்கு வட்டம், தலைவாசல், வாழ்ப்பாடி உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்தெடுக்கப்படுபவர்கள் இனச்சுழற்சி முறையில் வேலைக்கு அமர்த்தப்படுவர். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.


பணி விவரம்:


கிராம உதவியாளர் (Village Assitant)


பணியிட விவரம்:


மேட்டூ- 12


பெத்தநாயக்கன்பாளையம்- 11


சேலம் - 15
 
சேலம் தெற்கு வட்டம் - 28


சேலம் மேற்கு வட்டம் - 6 


தலைவாசல் - 5


வாழப்பாடி - 12


கல்வித் தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இதர தகுதிகள்:


விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சுங்கரி ஆகிய தாலுக்கா பகுதிகளில்  வசிப்பவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்தப் பணிகளுக்கு ஊதிய விகிதம் - சிறப்பு கால முறை ஊதியம் : ரூ11,100 முதல் ரூ. 35,100 வரை வழங்கப்பட உள்ளது.


வயது வரம்பு :


01.07.2022 அன்று அனைத்து  பிரிவினர்களுக்கும் குறைந்தப்பட்சமாக 21 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்.




 


விண்ணப்பிக்கும் முறை:


கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளமான https://www.tn.gov.in வருவாய் நிர்வாகத் துறையின் இணையத்தளமான https://cra.tn.gov.in மற்றும் சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வமான இணைத்தள முகவரியான https://salem.nic.in மூலம்  07.11.2022  வரை மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விவரங்களை சேலம் மாவட்ட https://salem.nic.inஎன்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


இணையதளம் வழியில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்.07.11.2022.


வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறி தேர்வு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நாள்.30.11.2022


 நேர்முகத்தேர்வு நாள் : 15.12.2022 மற்றும் 16.12.2022. 


ஒவ்வொரு தாலுக்காவிற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; அறிவிப்பின் முழுவிவரத்தை தெரிந்து கொள்ள https://salem.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.


ஆன்லைன் விண்ணப்பத்திற்கு https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171லிங்கை கிளிக் செய்யவும்.


வாழப்பாடி தாலுக்கா அறிவிப்பிற்கு https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2022/10/2022101420.pdf


என்ற லிங்கை கிளிக் செய்யவும்.




மேலும் வாசிக்க..


Engineering Counselling: பொறியியல் 3ம் கட்ட கலந்தாய்வு நிறைவு : மாணவர் சேர்க்கை எப்படி?- ஓர் அலசல்!