சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பவைகள் பற்றி காணலாம். இதன் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி விவரம்: 



  • Dental Surgeon - 07 

  • Data Entry Operator - 03 

  • Driver - 01

  • ANM - 02 

  • RBSK Pharmacist- 01 

  • Dental Assistant - 03 

  • Lab Technician - 01 

  • Audiometrician - 01 

  • Speech Therapist - 01 

  • Counselor - 03 

  • OT Assistant - 03 

  • Multi Purpose Hospital Worker - 16 

  • Physiotherapist - 01 

  • Cleaner cum Attender (Labour MMU) - 01


மொத்த பணியிடங்கள் -44


கல்வித் தகுதி :



  • பல் அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு பி.டி.எஸ் படித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆப்டேருக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

  • ஒட்டுநர் குறைந்தது 10ஆம் வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் உதவியாளர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • MMU Attender, MMU Driver,Supportive Staff போன்ற பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்



  • Dental Surgeon - ரூ.34,000

  • Data Entry Operator - ரூ.13,500

  • Driver - ரூ.13,500

  • ANM - ரூ.14,000 

  • RBSK Pharmacist- ரூ.15,000

  • Dental Assistant - ரூ.13,800

  • Lab Technician - ரூ.13,000

  • Audiometrician - ரூ.17,250

  • Speech Therapist - ரூ.17,000 

  • Counselor - ரூ.18,000 

  • OT Assistant - ரூ.11,200

  • Multi Purpose Hospital Worker - ரூ.8,500

  • Physiotherapist - ரூ.13,000

  • Cleaner cum Attender (Labour MMU) - ரூ.8,500


வயது வரம்பு: 


குறிப்பிட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 23 முதல் 40 வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை: 


விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது? 


விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://salem.nic.in/services/


கவனிக்க..


இந்தப் பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூரில் வசிப்பவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி 


நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம், சேலம் (District health soceity salem)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம் - 636001


விண்ணப்பிக்க கடைசி நாள் - 25.06.2023 மாலை 5 மணி வரை 


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://drive.google.com/file/d/1gJvqwm0Q99UsXM4vc_vAzeoJKcNm4_8E/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.